STUDENTS
ATL Lab: எங்கள் பள்ளியில் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. 1) அறிவியல் பூர்வமான செய்திகளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் செய்முறை பயிற்சிகள்் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. 2) சிக்கலான சில அறிவியல் உண்மைகளுக்கான தீர்வை இந்த Lab வழங்குகின்றது. 3) எளிய மாதிரிகள் மூலம் பல அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. 4) கிடைக்கக்கூடிய மலிவான பொருட்களைக் கொண்டு பல அறிவியல் உண்மைகளை மாதிரிகளாக செய்து உணர்ந்து கொள்ள முடிகிறது. 5) நடைமுறை அறிவியல் உண்மைகளையும் அறிவியல் பூர்வமான விஷயங்களையும் கற்றுக் கொள்ள முடிகிறது.சிவசங்கர் IX Std
NEET COACHING: நீட் கோச்சிங் புரிந்து கொள்ளுதல், அதன் அடிப்படை கருத்துக்களை புரிந்துகொள்ளுதல் மற்றும் அதற்க்கான பயிற்சி செய்தல் ஆகியவற்றிர்க்கு மிகவும் உதவுகிறது. இயற்பியல் பாடத்தில் சூத்திரத்தை மனப்பாடம் செய்வதை விட, செய்து அதை பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது. பொது தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற உதவுகிறது. பாடங்களை விட அதன் அடிப்படை கருத்துக்களை புரிந்து கொள்ள உதவுகிறது. இதனால் இயற்பியல் மற்றும் உயிரியல் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் போட்டி தேர்வு ஆகியவற்றை எதிர் கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது. S. கிருபாநிதி XII A Std
IIT - JEE COACHING: வணக்கம், இந்த சிறப்பு வகுப்பானது எனக்கு பயனுள்ளதாக அமைகிறது. இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய அனைத்திலும் நல்ல நாட்டம், தெளிவு ஆகியவை கிடைத்துள்ளன. மேலும் இது எனக்கு என் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வினை எளிதாகவும் (கணிதம்), பாடத்தில் நல்ல தெளிவையும் (இயற்பியல்) தருகிறது; பயனளிக்கிறது. என் நம்பிக்கையை கூட்டும் அளவிற்கு உள்ளது. இனிமேல் என் உழைப்பை அதிகப்படுத்துவேன் என உறுதி சொல்கிறான். நன்றி. C விக்னேஸ்வர் XII Std
என் பெயர் வீ.திலகா. நான் 6 முதல் 12 வரை மஞ்சக்குடி டி.டி.நரசிம்மன் சுவாமி தயானந்தா மேல்நிலைப் பள்ளிகூடத்தில் கல்வி பயின்றேன். S.S.L.C. யிலும், +2 (1122/1200) விலும் பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சிப்பெற்றுள்ளேன்.
பள்ளியின் சூழ்நிலை, ஆசிரியரின் நல்வழிகாட்டுதல் போன்றவற்றால் நல்ல மதிப்பெண் பெற முடிந்தது. தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டபடிப்பு முதலாம் ஆண்டு பயின்று வருகின்றேன்.
மதிப்பெண் தரவரிசைப்பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.இந்தப் பள்ளி என்னைப்போல் மாணவிகளை அறிவில் சிறந்தவர்களாக மட்டுமில்லாமல் சமுதாயத்தில் எல்லோரும் பாராட்டும் அளவிற்குரிய
பண்பாட்டினையும் போதிக்கும் நிலையமாக இருக்கிறது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.
என் பெயர் எஸ்.முத்து, Electrical Technician நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனது பெற்றோர்கள் அன்றாட விவசாயக்கூலித் தொழிலாளர்கள். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு கட்டணம் ஏதுமின்றி தொழிற்கல்வி உள்ளதை அறிந்து பத்மா நரசிம்மன் தொழிற்பள்ளியில் சேர்ந்தேன். இங்கு சேர்ந்த பிறகு தொழிற்கல்வி மூலம் ஒரு கம்பெனியில் வேலையில் சேர்ந்து என் குடும்பத்தையும் என்னையும் காப்பாற்றிப்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. தொழிற்கல்வி தவிர கணிப்பொறி, ஆங்கில வழிகற்றல் போன்ற சிறப்பு வகுப்புகள் நடத்துவது எனக்கு உறுதுணையாக உள்ளது.
எனக்கு முந்தைய வருடங்களில் படித்த பலர் தனியாகவோ, கம்பெனியிலோ சேர்ந்து நல்ல வாழ்க்கை வாழ்வது எனக்கு வாழ்வில் ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது.
என் பெயர் பிரியங்கா, எட்டாம் வகுப்பு என் பள்ளிக்கூடத்தில் எனக்குப்பிடித்தமானது மரங்களும், தூய்மையான காற்றும். திருவாரூர் மாவட்டத்திலேயே முதல் கணினி ஆய்வகம் எங்கள் பள்ளிக்கூடத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. எங்கள் பள்ளிகூடம் தமிழ் வழி கல்வி. எனினும் நாங்கள் மேற்கொண்டு கல்லூரியில் ஆங்கில வழியில் படிப்பதற்காக ஆங்கில ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கணினி வழியாக எங்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்க்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்தது ஆங்கில ஆய்வகமே.
என் பெயர் கே.ஆர். மணிகண்டன்., Welding Technician. நான் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். பத்மா நரசிம்மன் தொழிற்பள்ளியில் படித்துகொண்டு இருக்கிறேன், எனக்கு இங்கு பிடித்த பாடங்களை தேளிவாக கற்றுக்கொடுப்பது, செய்முறை விளக்கங்கள் அதிகமாக செய்வதற்கான சந்தர்ப்பம், பள்ளியின் மூலமாக வேலை கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் இப்படி வாழ்க்கை அமைவதற்கு உறுதுணையாக உள்ளது.
என் பெயர் ஜனனி, ஏழாம் வகுப்பு. மஞ்சக்குடி சிற்றூரை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிற்றூர்களில் வாழும் ஏழை எளியோர்களின் பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாய் கல்வி கற்பது எங்கள் பள்ளியில்தான். எங்கள் பள்ளியில் சுமார் 2000 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.
எங்கள் பள்ளியில் படிப்பு மட்டு்மின்றி நடனம், ஓவியம், பாட்டு, கலை என சொல்லிக்கொண்டே போகலாம். அதைத்தவிர குடிநீர் வசதி, கழிப்பறை வசதியும் நவீன முறையில் உள்ளது. அதுமட்டுமின்றி நூலகம்,
கணினி வகுப்பு, ஆங்கில ஆய்வகம், அறிவியல் ஆய்வகம் உள்ளது. எங்கள் பள்ளியின் முக்கிய பலமே முறையான ஒழுக்கம்.
எங்கள் பள்ளியில் பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. பள்ளியின் தரப்பில் பஸ் பாஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் படிப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
என் பெயர் இந்துஜா, ஏழாம் வகுப்பு. எங்கள் பள்ளியில் ஏழாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இலவசமாக படிப்தற்குரிய வசதி உள்ளது. இங்கு ஆண்களும், பெண்களும் அமைதியான சூழ்நிலையில் படிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எங்கள் பள்ளியில் பசுமைப்படை உள்ளது. எங்களுக்கு தரமான கல்விக்கிடைப்பது மட்டுமல்லாது, வருடாவருடம் அறிவியல் கண்காட்சி நடத்துகிறோம். இந்த கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அறிவியல் சோதனைகளை ஆசிரியர்களின்
உதவியுடன் நடத்தப்படுகிறது.
இப்பள்ளிக்கூடம் என் திறமையை வளர்க்க மிக உதவியாக உள்ளது
என் பெயர் வீ.வெங்கடேஷ். இப்பள்ளிக்கூடத்தில் படிப்பு மட்டுமல்லாமல், ஒழுக்கம், தன்னம்பிக்கை, ஆசிரியர்களிடம் மரியாதை, பணிவு, வாழ்க்கையில் எப்படி உயர்வது என்பதையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்பள்ளியில் சுமார் 2400 மாணவமாணவிகளும், ஆசிரிய ஆசிரியர்களையுகொண்டு சிறந்த பள்ளியாக திகழ்கிறது.
படிப்பில் நாட்டம் உள்ள மாணவ மாணவிகளுக்காக "MENTOR SCHEME" உள்ளது. எங்களுக்கு ஆங்கிலம், அறிவியல், கணக்கு போன்றவற்றில் அதிகப்படியாக சிறப்பு வகுப்புகள் எடுத்து, அரசுப் பொதுத்தேர்வில் 90% க்கு மேல் மதிப்பெண் பெற்று, அதனால் பொறியியல், மருத்துவம் படிப்பதற்க்கான வாய்ப்புகளை அமைத்துக்கொடுக்கின்றார்கள்.
கணித ஆய்வகம்: கணித பயன்பாடுகளை செயல் முறை மூலம் எளிமையாக புரிந்துக்கொள்ள அற்புதமான ஆய்வகம். வெறும் காட்சி வழி மட்டுமின்றி கணித புதிர்களை நாங்களே செயல்படுத்தி பார்ப்பது மனதிற்கு நிறைவைத் தருகிறது. கணிதம் மற்றும் அதன் கண்டுபிடிப்பாளர்களையும் தெரிந்துக் கொள்ள உதவியாக உள்ளது. பல்வேறு கணித வரைபடங்களை செயல் திட்டம் மூலம் அறிந்து கொண்டோம். பிற பள்ளி மாணவர்களுக்கு கிடைக்காத அரிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததில் பெருமை அடைகிறோம். வி அபர்ணா